பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லைThis is a featured page

தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம்.

உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.


பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை - Saranathan
ஆழமாகப் பார்த்தீர்களென்றால், மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்க்கின்றது. மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கின்றது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி அந்த நிகழ்ச்சி, நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்க முடியும்?

மங்களமாகத்தான் இருக்க முடியும்.

அதனால் நடக்கின்ற எல்லாவற்றிலும், நமக்குள் எவையெல்லாம் இணைக்கப்படுகின்றதோ, அவற்றைப் பார்த்து வாழும் பொழுது, வாழ்க்கை மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.

இந்த மாதிரி, வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே மங்களமயமானது தான் எனும் சத்தியத்தை உணர்கின்றவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் "ஜீவன் முக்தத் தன்மையில் வாழ்பவர்கள்" என்று சொல்கிறோம்.

சில பேர் என்னிடம் சொல்வது உண்டு, "இல்லை என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை."

சில பேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.

"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று கேளுங்கள்.

எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கின்ற முதல் வார்த்தை, "என்னை மாதிரிக் கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது."

இதுதான் துக்கத்தில் கூட உச்சத்தில் தன்னை நிறுத்துவது!.

"என் கஷ்டம் எதிரிக்குக் கூட வரக்கூடாது"

"என் கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தார்களென்றால், எப்போதே அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்" என்பார்கள்.

எல்லோருமே நம் வாழ்க்கையன் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கின்றோம். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.

ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம்? துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றோம். கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கின்றது.

ஒரு முறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கின்ற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால் கூட "இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?

காத்திருப்பா,
அதிகம் குதிக்காதே,
அதிகம் ஆடாதே"

என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றோம்.

துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலையுடனேயே இருக்கின்றோம். துக்கத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கின்றோம்.

துக்கம் வரும்பொழுதுதான், "ஆங்! இப்போதுதான் சரி. வாழக்கையே இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா"

ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடி வருமானால் "யாருக்குத் தெரியும்?" இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா" என்று விட்டுவிடுவது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சேனலை டியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும். அதே மாதிரி எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் வரும் என்று மனதில் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதுதான் வரும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி, அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.

God is not a Sadist.
Existence is not a Sadist.

உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்துகொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.


பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை - Saranathan
நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கின்றீர்கள்.

உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கின்றது. உங்கள் மூலமாக இறைவன் தன்னுடைய லீலைகளை நடத்திக் கொள்கின்றார்.

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது.

நீங்கள் ஒரு விபத்தாக
இங்கு வரவில்லை,
அருமையான அதிசயமாக, நீங்கள்
இங்கே பூத்திருக்கின்றீர்கள்.

விபத்து, அதிசயம் இந்த இரண்டுமே எதிர்பாராததுதான். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.

நடந்தது நல்லதென்று நாம் நினைத்தால், அதை அதிசயம் என்று சொல்லிக் கொள்கின்றோம். நடந்து கெட்டதென்றால், அதையே "விபத்து" என்று சொல்லிக் கொள்கின்றோம்.

ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.

வாழ்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம், அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பது.

வாழ்க்கையைக் கெட்டது என்று நினைத்தீர்களென்றால், அதை என்னவாகப் பார்ப்பீர்கள்...? வாழ்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகப் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.

வாழ்க்கையை நல்லது என்று நினைத்தீர்களென்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.

ஒருவர் என்னிடம் சொன்னார், "சாமி 30 வயது வரைக்கும் நானும் என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்".

நான் கேட்டேன், "அதுக்கப்புறம் என்ன நடந்தது?"

"அதற்குப்பிறகுதான் நாங்க இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துகூ கொண்டோம்" என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும் இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால், அது அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் அது விபத்து.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம், அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.

நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே.

வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத்தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.

மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.

மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.

கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.

பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.


தியான ஆராய்ச்சி

சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.

1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?

2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?

3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?

4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?

5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?

இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, ¦ந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எப்பவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.

எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும்.


sara_00
sara_00
Latest page update: made by sara_00 , Oct 28 2009, 3:54 AM EDT (about this update About This Update sara_00 Edited by sara_00

805 words added
2 images added

view changes

- complete history)
More Info: links to this page

Anonymous  (Get credit for your thread)


There are no threads for this page.  Be the first to start a new thread.

Related Content

  (what's this?Related ContentThanks to keyword tags, links to related pages and threads are added to the bottom of your pages. Up to 15 links are shown, determined by matching tags and by how recently the content was updated; keeping the most current at the top. Share your feedback on Wetpaint Central.)