பகவான் பக்தர்களை சோதிப்பது ஏன்?
ஞானானந்தம்
ஒருவன் உண்மையான பக்தனா, இல்லையா என்பது கடவுளுக்குத் தெரியும்.ஒரு பக்தனை பல சிரமங்களுக்கு உட்படுத்துகிறார், பகவான். அந்த பக்தன், எவ்வளவு துன்பம் இருந்தாலும், சகித்துக் கொண்டு, விடாமல் பகவானை பக்தி செய்து கொண்டிருக்கிறான். கடைசியில், இவனது பக்திக்கு மகிழ்ந்து, பல சுகபோகங்களையும் அளிக்கிறார் பகவான்.
பாண்டுரங்கனிடம் அபார பக்தி உள்ளவர் துக்காராம். அடிக்கடி கோவிலுக்கு போய் பாண்டுரங்கனை வழிபடுவார். வீட்டை விட, கோவிலில்தான் அதிக நேரம் இருப்பார்.
ஒரு நாள் துக்காராமின் மனைவி கமலாபாய் தன் புடவையை துவைத்து, காய வைத்து விட்டு உள்ளே சென்றாள். அந்த சமயம், துக்காராமிடம் வந்து, "உடுக்கத் துணியே இல்லை. ஏதாவது ஒரு கந்தையாவது கொடுங்கள்...' என்று கேட்டாள் ஒரு ஏழைப் பெண். தன் மனைவி கொல்லையில் உலர்த்தியிருந்த புடவையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து விட்டார் துக்காராம். புடவையை காணாது துக்காராமின் மனைவி நாற்புறமும் பார்க்க, தெருக்கோடியில், தன் புடவையை கட்டிக் கொண்டு ஒரு ஏழைப் பெண் போவதை கண்டதும், ஓடிப் போய் அவளை பிடித்து நிறுத்தி, "ஏது இந்த புடவை?' என்று கேட்டாள். "இது, துக்காராம் சுவாமி கொடுத்தது...' என்றாள் அந்த பெண். துக்காராமின் மனைவிக்கு கோபம் வந்தது.
"இவர் இப்படி பக்தி, பாண்டுரங்கன் என்று சொல்லி காலம் கழிக்கிறார். எனக்கு மாற்றிக் கட்டிக் கொள்ளக் கூட ஒரு புடவை இல்லை. இவர் என்னிடமிருந்த ஒரு புடவையையும் கூட தானம் பண்ணியிருக்கிறார். "பாண்டுரங்கா, பாண்டுரங்கா' என்று சொல்லிச் சொல்லி தான் இந்த நிலைக்கு வந்து விட்டோம். அந்த பாண்டுரங்கனை என்ன செய்கிறேன், பார்...' என்று சொல்லி, ஒரு குழவியுடன், பாண்டுரங்கன் சந்நிதிக்குள் நுழைந்தாள். அப்போது, ருக்மணியிடம், "அதோ பார். நீ இவளிடமிருந்து புடவையை வாங்கி வந்தாயே... இப்போது இவளுக்கு பதில் சொல்!' என்றார் பாண்டுரங்கன். தன் புடவையை ருக்மணி உடுத்தியிருப்பதை கண்ட, துக்காராமின் மனைவி திகைத்து விட்டாள். ஏழைப் பெண்ணாக வந்து, தன் கணவரிடம் ருக்மணிதேவி தான் புடவை கேட்டிருக்கிறாள். இதுவும் ஒரு சோதனை தான். அவரும் வீட்டிலிருந்த ஒரே புடவையை மனமுவந்து கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தாள்.
"தேவி, என்னை மன்னித்து விடு...' என்று கண்ணீர் பெருக வேண்டினாள்.
பாண்டுரங்கனை புகழ்ந்தவாரே கோவிலை வலம் வந்து வெளியே வந்தாள் கமலாபாய். வந்ததும் தன்னை பார்த்து ஆச்சரியப்பட்டாள். தன் உடம்பில் விலையுயர்ந்த பட்டாடை, உடலெங்கும் வைர, வைடூர்ய ஆபரணங்கள்! வீட்டுக்கு வந்து துக்காராமிடம் நடந்த விஷயங்களை சொன்னாள். துக்காராம், ஆச்சரியப்பட்டு, "நீயே பாக்கியசாலி, நான் இவ்வளவு காலமும் பாண்டுரங்கனை பக்தி செய்தும் கூட தேவியின் தரிசனம் எனக்கு கிடைக்கவில்லையே... ஆயினும், தேவி நேரில் வந்த போது, "முக்தி வேண்டும்!' என்று கேட்காமல், ஆடைக்கும், அணிகலனுக்கும் ஆசைப்பட்டு விட்டாயே...' என்றார்.
அவளுக்கு பொருளில் ஆசை; இவருக்கு அருளில் ஆசை. பிறகு, அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் பாண்டுரங்கன் அளித்தான் என்பது கதை!
அதாவது, பக்தர்களை சோதிக்கிறான் பகவான்; பிறகு, அருள் செய்கிறான். சோதனையில் தேற வேண்டும்! தேற முடியுமா, பாருங்கள்!
* * * ஆன்மிக வினா-விடை!
நாளும், கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது. இதன்படி, ஏழைகள், நல்ல நாள், நல்ல நேரம், நல்ல கிழமை ஆகியவை பார்க்கத் தேவையில்லை என்று அர்த்தமா?
எல்லாரும், நாளும், கிழமையும் பார்த்துத்தான் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்; ஆரம்பிக்க வேண்டும். நலிந்தோருக்கு எப்போது நன்மை செய்ய முடிகிறதோ, அப்போதே செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதுதான் இந்த பழமொழி.
|
|
|
பகவான் பக்தர்களை சோதிப்பது ஏன்?
|
3 |
Sep 23 2009, 2:40 AM EDT by
|
|
|
Thread started: Sep 22 2009, 3:43 AM EDT
Watch
great article and true to modern life sufferings.
1
out of
1 found this valuable.
Do you find this valuable?
Do you?
|
Showing 1 of 1 threads for this page