கடவுளைப் புறக்கணிப்பவர் யார்?This is a featured page

சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?

* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டிருப்பவனின் எதிரில் இம்சை நடைபெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும்,மாடும் கூட விரோதமின்றி இருந்தன.
* நெற்றியில் நாமம் போன்ற அடையாளமிட்டுக்கொள்வது போன்ற புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங்களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.
* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.
* சத்தியத்தை யார் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.
* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.
-கிருஷ்ணப்ரேமி சுவாமி


sara_narasimhan
sara_narasimhan
Latest page update: made by sara_narasimhan , Sep 22 2009, 3:41 AM EDT (about this update About This Update sara_narasimhan Edited by sara_narasimhan

100 words added

view changes

- complete history)
More Info: links to this page

Anonymous  (Get credit for your thread)


There are no threads for this page.  Be the first to start a new thread.

Related Content

  (what's this?Related ContentThanks to keyword tags, links to related pages and threads are added to the bottom of your pages. Up to 15 links are shown, determined by matching tags and by how recently the content was updated; keeping the most current at the top. Share your feedback on Wetpaint Central.)